கடந்த திங்கட்கிழமை அன்று பலூச்சிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படையின் இரண்டாவது பெரிய தளத்தின் மீது ஐந்து பலூச் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ஆனால் நடைபெற்ற சண்டையில் ஐந்து பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
PNS TURBAT துர்பாத் என்ற இந்த தளம் பாகிஸ்தான் கடற்படையின் வான்படை பிரிவு தளமாகும் இங்கு அமெரிக்க சீன தயாரிப்பு வானூர்திகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பேசும்போது மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கடற்படை செய்தி தொடர்பாளர் பேசும்போது இந்த தாக்குதலில் ஐந்து பயங்கரவாதிகளூம், துணை ராணுவத்தை சேர்ந்த ஒரு பாதுகாப்பு படை வீரரும் கொல்லப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்த தளம் சீன பாகிஸ்தான் பொருளாதார வழத்தடத்திற்கு அருகே அமைந்துள்ளது, அந்த வழித்தடத்திற்கும் சீன-பாகிஸ்தான் திட்டங்களுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, பலூர் போராளிகள் பாகிஸ்தான் மற்றும் குறிப்பாக சீன முதலீடுகளை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.