இந்தியாவிற்கு தனது நீர்மூழ்கியை விற்கத் திட்டமிடும் ஸ்பெயின்- முக்கிய தகவல்கள்
1 min read

இந்தியாவிற்கு தனது நீர்மூழ்கியை விற்கத் திட்டமிடும் ஸ்பெயின்- முக்கிய தகவல்கள்

இந்தியா தனது கடற்படைக்கு ஆறு நீர் மூழ்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளிடமிருந்து டெண்டர்கள் கோரியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஸ்பெயின் தனது நீர்மூழ்கியை விற்க ஸ்பெயின் முயற்சித்து வருகிறது.

இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி இந்திய வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

P-75I திட்டத்தின் கீழ் இந்தியா ஆறு டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.இதற்காக ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் , இரஷ்யா ஆகிய நாடுகள் தங்களது நீர்மூழ்கிகளை வழங்க தயாராக உள்ளது.

ஸ்பெயின் தனது S-80 Plus நீர்மூழ்கியை விற்க முயற்சித்து வருகிறது.இது ஜெர்மனியின் U-212/214 நீர்மூழ்கியை விட விலை குறைவானதாக உள்ளது.

இந்த S-80 Plus நீர்மூழ்கி 80.8 மீட்டர் நீளமும் 7.3 மீட்டர் அகலமும் உடையது. மேலும் 3 ஆயிரம் டன்கள் எடை உடையது. இதனை இயக்க 32 வீரர்கள் தேவைப்படுவர்.

கடலுக்குள் 19 நாட் வேகத்திலும் கடல் பரப்பில் பத்து நாட் வேகத்திலும் செல்லக்கூடியது.