விடுவிக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள்- கத்தார் செல்லும் பிரதமர் மோடி

  • Tamil Defense
  • February 13, 2024
  • Comments Off on விடுவிக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள்- கத்தார் செல்லும் பிரதமர் மோடி

ஐக்கிய அரபு நாடு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி அவர்கள் நாளை ( பிப் 14) கத்தார் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு அவர் கத்தாரின் அமிர் சேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தார் சிறைபிடித்த எட்டு முன்னாள் கடற்படை வீரர்களை விடுவித்த பிறகு தற்போது பிரதமரின் இந்த பயணம் அமைந்துள்ளது.இது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஜீன் 2016க்கு பிறகு தற்போது தான் பிரதமர் மோடி கத்தார் நாட்டிற்கு பயணமாக உள்ளார்.இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தற்போது 20 பில்லியன் டாலர்களாக உள்ளது.இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளின் உறவுகள் மேம்படும் என கூறப்படுகிறது.

உளவு குற்றச்சாட்டாக கத்தாரில் பணிபுரிந்து வந்த முன்னாள் கடற்படை வீரர்களை கத்தார் கைது செய்து அவர்களுக்கு தண்டனையும் விதித்திருந்தது.இந்திய அரசின் இடைவிடாத முயற்சிகளால் தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியுள்ளனர்.