உள்நாட்டுத் தயாரிப்பு தபாஸ் ட்ரோனின் மீது ஆர்வம் காட்டும் படைகள்

  • Tamil Defense
  • February 15, 2024
  • Comments Off on உள்நாட்டுத் தயாரிப்பு தபாஸ் ட்ரோனின் மீது ஆர்வம் காட்டும் படைகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நடுத்தர ரகத்தைச் சேர்ந்த தபாஸ் மீது இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை தனது ஆர்வத்தை வெளியிட்டுள்ளனர். தபாஸ் ட்ரோனின் செயல்பாடு மற்றும் அதன் திறனை டிஆர்டிஓவிடம் கேட்டு தெரிந்துள்ளது இந்திய விமானப்படை மற்றும் கப்பல் படை.

இதன் மூலம் தபாஸ் ட்ரோனின் திறன் முழுதாக விமானப்படை மற்றும் கப்பல் படை கேட்டறிந்துள்ளனர். தன்னிடம் உள்ள இரண்டு ட்ரோன்களை இந்திய கடற்படைக்கு டி ஆர் டி ஓ வழங்க உள்ளது.இந்த இரண்டு டிராேன்களையும் கடற்படை அந்தமான் பகுதியில் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சோதனைகள் சிறப்பாக முடியும் பட்சத்தில் 10 முதல் 12 ட்ரோன்களை இந்திய கடற்படை பெறும். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்க டி ஆர் ஓ டி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.