19 மாதங்களில் தயாரான ராணுவத்திற்கான இலகு ரக டேங்க்

லாசன் அண்ட் டூப்ரோ நிறுவனம் ராணுவத்திற்கான இலகுரக டேங்க்கை 19 மாதங்களில் தயார் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது அதை சோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ உடன் இணைந்து இந்து திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளதாக L&T நிறுவனம் கூறியுள்ளது. 19 மாதங்களில் இந்த டேங்க் தயாராகி உள்ளது

வரும் கோடை காலத்தில் இந்த டேங்க்கை சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.தொடர்ச்சியான சோதனைகள் மூலம் டேங்கின் திறன் மேம்படுத்தப்படும்.