நீர் மூழ்கிகளுக்கு கனரக அதிஎடை டோர்பிடோ வாங்கும் இந்தியா- புதிய தகவல்கள்

பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ராணுவ தளவாட கொள்முதல் கூட்டத்தில் இந்திய கடற்படையின் தாக்கும் நீர் மூழ்கிகளுக்கு அதிக எடை கொண்ட டர்பிடோக்களை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பெறுவதின் மூலம் கடற்படையில் தற்போது உள்ள கல்வாரி ரக நீர்மூழ்கிகளின் தாக்குதல் திறன் அதிகரிக்கப்படும்.

கடற்கொள்ளைகளுக்கு எதிராக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் இந்திய கடற்படைக்கு இந்த புதிய கனரக அதிஎடை டர்பீடோக்களின் வரவு கண்டிப்பாக உந்துதல் சக்தியாக இருக்கும். இதற்கு முன் 2016இல் இத்தாலிய நிறுவனம் ஒன்றுடன் இந்தியா டோர்பிடோக்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருந்தது. ஆனால் லஞ்ச புகார் காரணமாக அந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.

தற்போது எந்த நிறுவனத்தில் இருந்து டோர்பிடோக்கள் வாங்கப்பட உள்ளன என்பது குறித்து எந்த வித தகவலும் இல்லை. ஆனால் இந்தியாவுடைய தயாரிப்பு திறனை மேம்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு அந்த டோர்பிடோக்களை இந்தியாவில் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது.

பொறுத்திருந்து காணலாம்.