சுமார் 19,000 கோடி செலவில் 200 தூரம் நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்காக வாங்க கேபினட் கமிட்டி அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மார்ச் முதல் வாரத்தில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இடையே கையெழுத்தாக உள்ளது.
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் கூட்டு தயாரிப்புதான் இந்த பிரமோஸ் ஆகும்.தற்போது தூரம் நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகளை மேலதிக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தியா முயற்சித்து வருகிறது.
மேலும் பிரம்மாஸ் ஏவுகணைகளை இந்திய மயமாக்கும் பொருட்டு அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிற அதாவது பிரமோஸ் ஏவுகணையின் பாகங்கள் ஒவ்வொன்றாக இந்திய தயாரிப்பாக மாற்றப்பட்டு கொண்டு வருகிறது.