மிக் – 29 யுபிஜி விமானங்களுக்கு புதிய என்ஜின் – புது வாழ்வு பெறும் விமானங்கள்

  • Tamil Defense
  • February 24, 2024
  • Comments Off on மிக் – 29 யுபிஜி விமானங்களுக்கு புதிய என்ஜின் – புது வாழ்வு பெறும் விமானங்கள்

இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு திறனை பலப்படுத்தும் பொருட்டு இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களுக்கு புதிய என்ஜின்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த விமானங்களின் வாழ்நாளை அதிகரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இரஷ்யா மற்றும் இந்தியாவின் ஹால் நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளது.சுமார் 5300 கோடிகள் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மேலும் விமானத்தின் வாழ்நாளை 40 ஆண்டுகளில் இருந்து 50 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது.

விமானத்தில் எந்த ரக என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது என்ற தகவல்கள் இல்லை.பெரும்பாலும் RD-33MK Engine பயன்படுத்தப்படலாம்.மிக்-29 விமானங்களை 2029ம் ஆண்டு வரை படையில் பயன்படுத்தலாம் என விமானப்படை நினைத்திருந்த வேளையில் தற்போது புதுப்பித்தல் பணிக்கு பிறகு 2035 வரை இவ்விமானங்களை விமானப்படை பயன்படுத்தும்.