ருத்ரம் – 3 ஏவுகணை சோதனைக்கு தயாராகும் சுகாய் – வலுக்கும் பலம்

  • Tamil Defense
  • February 21, 2024
  • Comments Off on ருத்ரம் – 3 ஏவுகணை சோதனைக்கு தயாராகும் சுகாய் – வலுக்கும் பலம்

ருத்ரம் வான்-வான் ஏவுகணை வரிசைகளின் அடுத்த கட்ட மேம்பாட்டு சோதனைக்கு சுகாய் விமானம் தயாராகி வருகிறது.இதற்காக ஒரு சுகாய் விமானம் பிரத்யேகமாக தயாராகி வருகிறது.இந்த விமானத்தில் இருந்து ருத்ரம் மார்க் 3 ஏவுகணை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ருத்ரம் 1.6 டன்கள் எடையும்= 300-400கிமீ அளவிலான வெடிபொருளையும் சுமந்து செல்லும் திறன் பெற்றது.11 கிமீ உயரத்தில் இருந்து ஏவப்பட்டால் மாக் 0.9 வேகத்தில் சுமார் 600கிமீ வரை சென்று தாக்குதல் நடத்தக் கூடியது.இது விமானப்படையின் தாக்குதல் தூரத்தை அதிகரிக்கும்.

வான் இலக்குகளை தவிர்த்து ரேடார் நிலையம், பங்கர்கள், ஓடுதளம் போன்ற பல்வேறு இலக்குகளை தாக்கியழிக்கும் திறன் கொண்டது.