மாலத்தீவில் இருந்து இந்திய மிலிட்டரி வீரர்கள் வெளியேற அந்நாட்டு அதிபர் உத்தரவிட்ட பிறகு தற்போது இந்திய சிவிலியன் குழு மாலத்தீவு செல்கிறது.இந்த குழு அங்கு இந்திய வீரர்கள் செய்த பணியை செய்யும்.அங்கு மூன்று ஏவியேசன் குழுக்களாக நமது வீரர்கள் பணியாற்றி வந்தனர்.இந்த குழு அந்த மூன்றில் ஒன்றில் பணிசெய்ய அனுப்பப்பட்டுள்ளது.
பல ஆண்டகளாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து வந்த இராணுவ உறவு தற்போது முடிந்துள்ளது.இந்த பணிகளை இனி சிவிலியன்கள் மேற்கொள்வர்.
இந்தியா மாலத்தீவு உறவு தற்போது தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது.மாலத்தீவு நாட்டிற்கு இந்தியா தனது வானூர்திகளை பரிசளித்து பல விதங்களில் அந்நாட்டிற்கு உதவியாக இருந்தது.தற்போது அங்கு புதிதாக ஒரு அரசாங்கம் உருவான பிறகு நிலைமை மாறியது.
புதிதாக பதவியேற்ற மாலத்தீவு அதிபர் இந்திய இராணுவப் படைகளை மார்ச் 10க்குள் அந்நாட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளார்.