இந்தியா தற்போது புதிதாக 1200 இழுவை ரக towed Howitzers துப்பாக்கிகள் வாங்க உள்ளது. முன்னதாக 400 துப்பாக்கியில் மட்டுமே வாங்க முடிவெடுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலதிக 800 துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன. இந்த 1200 துப்பாக்கிகளும் இந்திய ஆர்டில்லரி ரெஜிமென்டின் முதுகெலும்பாக விளங்க உள்ளது.
இந்த துப்பாக்கிகள் 15 டன்களுக்கும் குறைவான எடையை பெற்று இருப்பதால் பல்வேறு இடங்களில் பல்வேறு காலநிலைகள் இவற்றை எளிதாக கையாள முடியும். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் செயல்படுத்திறன் அதிகரிக்கும்.இந்திய ராணுவத்திற்கு தற்போது 1580துப்பாக்கிகள் தேவையாக உள்ளது. வழிகாட்டும் அமைப்பு இரவு பகல் இயங்கும் திறன், ஜிபிஎஸ், கட்டுப்படுத்தும் அமைப்பு ( Fire control) போன்ற சிறப்பம்சங்களை பெற்றதாக இந்த துப்பாக்கி இருக்கும்.
இந்த ராணுவத்தின் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு இந்த Towed Howitzers துப்பாக்கிகள் ஒரு மைல் கல்லாக அமையும்.