பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தாக்கும் வானூர்திகள் மற்றும் ஆர்டில்லரி வழங்க தயாராக உள்ள இந்தியா

  • Tamil Defense
  • February 18, 2024
  • Comments Off on பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தாக்கும் வானூர்திகள் மற்றும் ஆர்டில்லரி வழங்க தயாராக உள்ள இந்தியா

இந்தியா தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை வழங்க உள்ளது. இவை தவிர தற்போது இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தி உள்ள தாக்கும் வானூர்திகள் ( Attack helicopters )மற்றும் Howitzers ( Artillery) துப்பாக்கிகள் மற்றும் கவச உடைகள் ( Bullet proof jackets) ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு இந்தியா சார்பில் குறைந்த வட்டியில் லோன் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தனது சொந்த தயாரிப்பான தேஜஸ் விமானம் மற்றும் ALH Dhruv வானூர்தியையும் ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளது.

இந்தியா சொந்தமாக Prachand என்ற தாக்கும் வானூர்தி மேம்படுத்தி உள்ளது. இவற்றை வழங்கவும் இந்திய தயாராக உள்ளது. அதிகளவிலான ஏற்றுமதி மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவு மேலும் பலப்படும்.