மீண்டும் பிரச்சனையில் ஏகே 203 துப்பாக்கி தயாரிப்பு – காரணம் தான் என்ன ?

  • Tamil Defense
  • February 13, 2024
  • Comments Off on மீண்டும் பிரச்சனையில் ஏகே 203 துப்பாக்கி தயாரிப்பு – காரணம் தான் என்ன ?

பொருளாதாரப் பிரச்சினை மற்றும் உள்நாட்டு தயாரிப்பு ஆகிய பிரச்சனைகள் காரணமாக ஏகே அக துப்பாக்கிகள் தயாரிக்கும் திட்டம் தற்போது பிரச்சனையில் உள்ளது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் பணி தற்போது இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கியில் உள்நாட்டு பொருள்களின் இணைப்பு மற்றும் திட்டத்திற்கான நிதி தட்டுப்பாடு காரணமாக திட்டம் செயல்படுவதில் பிரச்சனையாக உள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் ராயல்டி பெறுவதில் அதிக தொகை போன்ற பிரச்சனைகள் காரணமாக திட்டம் செயல்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு ஏகே-203 துப்பாக்கியின் விலைக்கு மூன்று வெளிநாட்டு ரக துப்பாக்கிகளை வாங்கிவிடலாம் என்ற அளவில் பணச்செலவு உள்ளது.2021ல் இந்த துப்பாக்கிகள் பெறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு உத்திரப்பிரதேசத்தின் அமேதியில் இந்த துப்பாக்கிகள் தயாரிக்க திட்டம் தயாரானது.

முதல் தொகுதியாக 800000 துப்பாக்கிகள் நேரடியாக வாங்கப்பட்டு பின் 650000 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டது.எதிர்காலத்தில் திட்டம் நகருமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.