விண்வெளி செல்லும் குழுவில் தேர்வாகியுள்ள சென்னை அதிகாரி !!

  • Tamil Defense
  • February 28, 2024
  • Comments Off on விண்வெளி செல்லும் குழுவில் தேர்வாகியுள்ள சென்னை அதிகாரி !!

க்ரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் சென்னையில் கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல்19 ஆம் தேதி பிறந்தார், பள்ளி கல்வியை முடித்த அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு சேர்ந்து பயிற்சி பெற்று குடியரசு தலைவரின் தங்க பதக்கம் Presidents Gold Medal பெற்று பின்னர் விமானப்படை அகாடமியில் Sword of Honor வீரவாள் பெற்று பயிற்சி நிறைவு செய்து இந்திய விமானப்படையில் அதிகாரியாக 21 ஜூன் 2003ஆம் ஆண்டு இணைந்தார்.

அன்று முதல் தற்போது வரை இவர் சுமார் 2900 மணி நேரம் சுகோய்-30 MKI, மிக்-21, மிக்-29, SEPECAT ஜாகுவார், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

இவரும் இளம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் விமானி பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் மேலும் இவர் ஊட்டி வெலிங்டனில் உள்ள DSSC எனப்படும் பாதுகாப்பு படைகள் ஊழியர்கள் கல்லூரி , அமெரிக்க ராணுவத்தின் கட்டளையக மற்றும் பொது ஊழியர் கல்லூரி மற்றும் சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள இந்திய விமானப்படையின் இளம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கான கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர் ஆவார்.