84 ஆயிரத்து 560 கோடியில் செலவில் பாதுகாப்பு படைகளுக்கு புதிய ராணுவ தளவாடங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ராணுவ தளமாட கொள்முதல் கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை டேங்க் எதிர்ப்பு கன்னிவெடிகள், வான் பாதுகாப்பு ரேடர்கள், கனராக டோர்பிடோக்கள், கடல் சார் ரோந்து மற்றும் கண்காணிப்பு விமானங்கள், வானிலையே எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளன.
கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் கண்காணிப்பு மற்றும் ரோந்து திறனை மேம்படுத்தும் பொருட்டு நடுத்தர, பல பணிகள் செய்யும் கண்காணிப்பு விமானங்கள் வாங்கப்பட உள்ளன. சிறிய, மெதுவாக , தாழ்வாக வரும் எதிரி இலக்குகளை கண்டறிந்து டிராக் செய்யக்கூடிய ரேடர்கள் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
விமானப்படையின் செயல்படுத்திறனை அதிகரிக்க வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.