தேஜஸ் விமானங்களை வாங்க உள்ளதா அர்ஜென்டினா ?
அர்ஜென்டினாவிற்கான இந்தியத் தூதர் அர்ஜென்டினா விமானப்படை தளபதியான மயோர் பெர்னாடோ அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் மற்றும் இருநாட்டு விமானப்படைகளுக்கு இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் இரு நாட்டு விமானப் படைகளில் கூட்டு பயிற்சி, பயிற்சி தொடர்பான அறிவை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை விவாதிக்கப்பட்டன. மேலும் அர்ஜென்டினாவின் ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர இந்திய தயாரிப்பு விமானம் ஆன தேஜஸ் மற்றும் வானூர்திகள் ஏற்றுமதி தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. தேஜாஸ் விமானங்கள் வாங்க உலகில் பல நாடுகள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அதில் அர்ஜென்டான்வும் ஒன்று.
அர்ஜென்டினா தேஜஸ் விமானம் வாங்கப்பட்டால் அது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும். விலை குறைந்த அதே நேரத்தில் நவீன ரக விமானம் அர்ஜென்டினாவிற்கு கிடைக்கும். அதேபோல இந்தியாவிற்கும் ஒரு நல்ல ஏற்றுமதி கூட்டாளி நாடு கிடைக்கும்.
ஏற்றுமதி தொடர்பாக சில பிரச்சனைகள் இருந்தாலும் அடுத்தடுத்த சந்திப்புகளில் அது நிவர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.