இந்திய விமானப் படைக்காக மேலும் 97 தேஜஸ் போர் விமானங்கள்
1 min read

இந்திய விமானப் படைக்காக மேலும் 97 தேஜஸ் போர் விமானங்கள்

இந்திய விமானப்படைக்காக மேலும் 97 தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இந்திய விமானப்படைக்காக இதுவரை 180 தேஜஸ் மார்க் 1 a போர்விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இது இந்திய விமானப் படையின் சக்தியை பல மடங்கு அதிகரிக்கும். ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு 83 தேஜஸ் போர் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேஜஸ் விமானத்தில் பறந்த பிறகு தற்போது இந்த மேலதிக 97 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை பாதுகாப்பு கொள்முதல் அமைப்பு வழங்கியுள்ளது. இத்துடன் இந்திய விமானப் படையின் முதலெழும்பாக கருதப்படும் சுகாய் 30 எம் கே ஐ போர் விமானங்கள் அப்கிரேட் செய்யப்படவுள்ளன. முதல் கட்டமாக 80 சுகாய்30 எம் கே ஐ விமானங்கள் அப்கிரேட் செய்யப்பட உள்ளன.

தற்போது தேஜஸ் மார்க் 2 விமானத்தின் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.