
இந்தியா உடனான பாதுகாப்பு உறவை தொடர்ந்து மேம்படுத்துவோம் என பென்டகன் கடந்த வெள்ளி அன்று கூறியுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்தியா உடனான அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பென்டகன் கூறியுள்ளது.
1997 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி உறவு ஏதும் இன்றி இருந்தது. ஆனால் தற்போது 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் ஏற்றுமதி இறக்குமதி வளர்ந்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடன் உடனும் உறவை மேம்படுத்துவதில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக பென்டகன் கூறியுள்ளது.