இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்களை ஏவியும் கடல் தரை மற்றும் வான் வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்தும் காசா மீது போர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அங்குள்ள ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இது தொடர்பான காணொளிகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
தற்போது காசாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தரைவழியாக காசாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். காசாவில் இருந்து வந்த ராக்கெட்டுகள் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வந்தன.
இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பிடத்தை குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேலில் விமானப்படை.
ஹமாஸ் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.