இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினால் பணையக் கைதிகளை ஒவ்வொருவராக கொல்வோம்-ஹமாஸ் கடும் எச்சரிக்கை

  • Tamil Defense
  • October 10, 2023
  • Comments Off on இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினால் பணையக் கைதிகளை ஒவ்வொருவராக கொல்வோம்-ஹமாஸ் கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் காசாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தாங்கள் பிடித்து வைத்துள்ள பணைய கைதிகளை ஒவ்வொருவராக கொள்வோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சனி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

கமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் காசாவிற்கு செல்லும் குடிநீர் சப்ளை உணவு மற்றும் மின்சாரத்தை நிறுத்துவதாக உத்தரவை வெளியிட்டுள்ளது.

நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியாவும் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்த தாக்குதலை அடுத்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் தற்போது கூறி உள்ளதாக அல் ஜெசிரா செய்தி வெளியிட்டுள்ளது.