பாலஸ்தீனியர்கள் இன்று இஸ்ரேல் மீது ஐந்தாயிரம் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். 50 முதல் 60 ஹமாஸ் பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் பாரா கிளைடிங் வாகனங்கள் உதவியுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதற்குப் பிறகு இஸ்ரேல் தேசிய நெருக்கடி அறிவித்து போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வெறும் மோதல் அல்ல இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட போர் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு கூறியுள்ளார். தற்போது இஸ்ரேலிய வீரர்கள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை அடித்து விரட்டி வருகின்றனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை தற்போது பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் விடுவிக்க தேவையான பணைய கைதிகளை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாக ஹமாஸ் தலைவர் கூறியுள்ளார்.
ஹமாஸ் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் தொடர்பான காணொளிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 900-த்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
எதிரிகளை அழித்து ஒழிக்க மொத்த இஸ்ரேலும் ஒன்றுபட்டுள்ளதாக இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை தற்போது விடுவித்துள்ளார்.காசா எல்லை அருகே உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளை ஹமாஸ் தற்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.