மேலும் 40 C-295M போக்குவரத்து விமானங்கள் வாங்க உள்ள இந்தியா ?

  • Tamil Defense
  • October 6, 2023
  • Comments Off on மேலும் 40 C-295M போக்குவரத்து விமானங்கள் வாங்க உள்ள இந்தியா ?

இந்திய விமானப்படை தனது போக்குவரத்து பிரிவை தற்போது வலுப்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 சி-295 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது. மேலும் இந்த விமானங்களை இந்தியாவின் டாட்டா நிறுவனம் மற்றும் ஏர்பஸ் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ளன.மொத்தமாக 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

தற்போது பாதுகாப்புத் துறையில் இருந்து வெளிவரும் செய்திகள் மூலமாக இந்தியா மேலும் 40 விமானங்கள் வாங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய விமான படைப்பு மட்டுமல்லாமல் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு இந்த விமானங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த விமானங்கள் உதவியுடன் கண்காணிப்பு ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முடியும்.

இந்த விமானத்தால் ஐந்து முதல் 10 டன்கள் எடை சுமக்க முடியும். 21 வீரர்கள் அல்லது 49 பாரா வீரர்களை சுமந்து செல்லும் தன்மை கொண்டது.