இந்திய ராணுவத்திற்காக 1200 இழுவை ஆர்டில்லரி துப்பாக்கி அமைப்புகள் வாங்க திட்டம்

இந்திய ராணுவத்தின் ஆர்டில்லரி படைப்பிரிவை வலுப்படுத்தும் பொருட்டு 1200 அடுத்த தலைமுறை இலுவை துப்பாக்கி அமைப்புகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய ஆர்ட்டில்லரி வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 400 துப்பாக்கிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இழுவை துப்பாக்கி அமைப்பு 15 டன்கள் எடை உடையதாக இருக்கும். மேலும் பல மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களை பெற்றிருக்கும். Laser based ignition, Software defined radio , hybrid drive, lithium iron batteries போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை இந்த இழுவை துப்பாக்கி பெற்று இருக்கும்.

மேலும் இந்த துப்பாக்கியில் ஜிபிஎஸ் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். இரவு பகல் என அனைத்து கால நிலைகளிலும் செயல்படும் வண்ணம் இந்த துப்பாக்கி இருக்கும். இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharat forge, tata defence மற்றும் L&T போன்ற இந்திய நிறுவனங்கள் இந்த டென்டரில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆர்டில்லரி துப்பாக்கியில் பலதரப்பட்ட குண்டுகளை வைத்து சுட முடியும். அதில் ஒன்றுதான் ராம்ஜெட் சக்தியால் செயல்படக்கூடிய வெடிகுண்டு ஆகும். இது போன்ற நவீன குண்டுகள் 80 முதல் 100 கிலோமீட்டர் வரை சென்று தாக்குதல் நடத்தக் கூடியது.