பஞ்சாபில் MRSAM வான் பாதுகாப்பு அமைப்பை களம் இறக்கிய இந்தியா- காரணம் என்ன?

  • Tamil Defense
  • October 8, 2023
  • Comments Off on பஞ்சாபில் MRSAM வான் பாதுகாப்பு அமைப்பை களம் இறக்கிய இந்தியா- காரணம் என்ன?

இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணை (MRSAM) அமைப்பை பஞ்சாபின் அடம்பூர் பகுதியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி உள்ளது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் டி ஆர் டி ஓ மற்றும் இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி நிறுவனத்தால் இணைந்து மேம்படுத்தப்பட்டதாகும். வானில் வரும் எதிரியின் இலக்குகளை வானிலேயே தாக்கி அழிக்கும் திறன் பெற்றது இந்த ஏவுகணை அமைப்பு.

இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்பாட்டில் வைத்துள்ளது. மேலும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பை நிலை நிறுத்துவதன் மூலம் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடியும்.

உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்த வான் பாதுகாப்பு அமைப்பு ஒரு சான்றாக அமைந்துள்ளது.