பிரான்ஸ் செல்லும் பாதுகாப்பு துறை அமைச்சர் நீர்மூழ்கிகள் வாங்கத் திட்டமா ?

அரசு முறை பயணமாக அடுத்த வாரம் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து பல்வேறு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படுவது குறித்து வெளியான தகவலை அடுத்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து வானூர்தி எஞ்சின் மற்றும் போர் விமானங்கள் இணைந்து தயாரிக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்சை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் இத்தாலி நாட்டிற்கும் பயணம் செய்ய உள்ளார் இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட்டு உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது அதேபோல கடற்படைக்காக மூன்று நீர்மூழ்கிகள் கட்டவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.