
பாகிஸ்தானின் அணு ஆயுத துறை அமைந்துள்ள டி ஜி கான் எனும் இடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வெடி விபத்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு பலுசிஸ்தான் மற்றும் கைபர் பத்துன்னுவா எனும் இரு இடத்திலும் ஏற்பட்ட விபத்தில் 65 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு மிகக் குறைந்த நேரத்திலேயே இந்த டிஜி கான் எனும் இடத்திலும் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இந்த டிஜி கான் தளத்தில் தான் அணு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக பல்வேறு யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து பொறுத்துதான் பார்க்க வேண்டியுள்ளது.