ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த 300 இஸ்ரேலியர்கள்; காசா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

  • Tamil Defense
  • October 8, 2023
  • Comments Off on ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த 300 இஸ்ரேலியர்கள்; காசா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

சனி அன்று காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத குழு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இதனை அடுத்து காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மறைந்துள்ள இடங்களை தரைமட்டமாக்குவோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 232 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் இஸ்ரேலின் 22 இடங்களில் இஸ்ரேல் மற்றும் கமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல் நீடித்துள்ளது. இதில் குறைந்தது இரண்டு இடங்களில் கமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.ஹமாஸ் 3000 ராக்கெட்டுகள் மூலம் தாக்கியதில் குறைந்தது ஆயிரம் இஸ்ரேலியர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.