ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த 22 அமெரிக்கர்கள்- அடுத்து என்ன?
இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் காசாவிற்கு செல்லும் உணவு மின்சாரம் தண்ணீர் ஆகியவற்றை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.காசாவின் ஒரே பவர் ஸ்டேஷனும் இன்னும் சிறிது நாட்களில் தனது செயல்பாட்டை எரிபொருள் இல்லாமல் நிறுத்தி விடும்.
இந்த மோதலில் இரு பக்கமும் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது காசாவை சுற்றி இஸ்ரேல் அதிக அளவிலான வீரர்களை குவித்து வருகிறது. விரைவில் தரை வழியாக காசாவை இஸ்ரேல் ஊடுருவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2700 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம் காசாவில் 950 பேர் உயிரிழந்ததாகவும் 5000 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்களும் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல் குழுவை மத்திய தரைக் கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணையாக நிற்கும் என ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மோதலில் இருந்து விலகி இருக்குமாறு ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.