காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் போட்டு தள்ளியுள்ளனர்.
கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில் ராணுவம் மற்றும் குப்வாரா காவல் துறையினர் இணைந்து இந்த ஆப்பரேஷனை நடத்தியுள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மச்சில் செக்டாரில் இந்த என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.
என்கவுண்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த என்கவுண்டரில் இருந்து இரு ஏகே ரக துப்பாக்கிகள்,ஒரு கை துப்பாக்கி மற்றும் 2,100ரூ பாகிஸ்தானி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.