புதிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பெறும் இந்திய கடற்படையின் நீர் மூழ்கி வேட்டையாடி P8I விமானம்

இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் P8I விமானம் இந்திய கடற்படைக்கு ஒரு ஆகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. இந்திய பெருங்கடல் பகுதி மட்டுமல்லாமல் சீனாவுடனான மோதலின் போதும் லடாக் மற்றும் கிழக்கு இமாலய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு இந்த விமானம் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தமிழகத்தில் அரக்கோணத்தில் உள்ள ஐ என் எஸ் ராஜாளி தளத்திலிருந்து எட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்களின் தாக்கம் திறனை அதிகரிக்கும் பொருட்டு சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் Torpedo ஆகியவை இணைக்கப்பட்டன. இவற்றின் மூலம் எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை இந்த விமானத்தால் வேட்டையாட முடியும்.

ராயத்தான் நிறுவனம் மேம்படுத்திய AN/APY-10 ரேடாரின் உதவியுடன் கடினமான சூழ்நிலையிலும் கூட கடலோர மற்றும் ஆழ்கடல் பகுதியில் கண்காணிப்பை மேற்கொள்ள முடியும்.

இதுவரை 40,000 மணி நேரம் பறந்து இந்த விமானங்கள் சாதனை படைத்துள்ளன. எந்த விமானங்கள் சிறப்பாக செயல்படும் காரணத்தால் மேல் அதிக விமானங்கள் வாங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.