படைகளுக்கு தேவையாக உள்ள 20 பெரிய போக்குவரத்து விமானங்கள்- என்ன திட்டம் வைத்துள்ளது இந்தியா ?

இந்திய விமானப்படையில் தற்போது செயல்பாட்டில் உள்ள IL-76MD விமானங்கள் விரைவில் படையில் இருந்து ஓய்வு பெற உள்ளன.1980 களில் சோவியத் யூனியனிடம் இருந்து இந்த விமானங்கள் பெறப்பட்டன.விமானப்படையில் சிறப்பாக செயல்பட்ட இந்த விமானங்கள் தற்போது தங்கள் வாழ்நாளில் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன.

தற்போது விமானப்படையில் 17 IL-76MD விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவற்றில் பெரும்பான்மையான விமானங்கள் தங்களது 40 வருட சேவை முடியும் தருவாயில் உள்ளன.இவை தவிர விமானப்படையில் தற்போது 11 C-17 Globemaster III விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவையே தற்போது விமானப்படையின் முதுகெலும்பாக உள்ளன.

போர்சமயத்தில் ஆயுதங்கள் மற்றும் முக்கிய சப்ளைகளை வழங்குவதற்கும் அமைதிக் காலத்தில் பல முக்கிய பணிகளுக்கு இன்றியமையாத தேவையாக உள்ள இந்த விமானங்கள் விமானப்படையின் முக்கியத் தேவை ஆகும். தற்போது விமானப்படைக்கு 20 விமானங்கள் தேவையாக உள்ளது.

ஆனால் விமானப்படை இதுவரை எந்த விமானத்தையும் தேர்வு செய்யவில்லை. விமானங்களின் தேர்வு என்பது அதன் திறன் சுமை தூக்கும் திறன் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் ஆகியவற்றை பொருத்தே அமையும்.