“ஜெய்ஹிந்த் அப்பா ” தந்தைக்கு இறுதி வணக்கம் செலுத்திய மகன்

அனந்தநாக் என்கௌன்டரில் வீரமரணம் அடைந்த தனது தந்தை கலோனல் மன்பிரீத் சிங் அவர்களுக்கு இராணுவ உடை அணிந்து வீரவணக்கம் செலுத்தியுள்ளான் அவரது ஆறு வயது மகன் கபீர்.பஞ்சாபின் மொகாலி மாவட்டத்தை சேர்ந்த கலோனல் மன்பிரீத் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அவருக்கு இரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.மொகாலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பரோன்ஜியானில் காலை முதலே திரண்டு வந்த பொதுமக்கள் அவரது உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தனது தந்தை உடல் முன்னாள் நின்று பாரத் மாதாகி ஜேய் மற்றும் பாரத் மாதாகி சபூட் கி ஜேய் என் முழக்கத்தை சிறுவன் உரக்க கூறியுள்ளான்.

இறுதி ஊர்வலத்தில் முக்கிய அரசு மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.கலோனல் மன்பிரீத் அவர்கள் ஏற்கனவே தனது வீரதீரத்திற்காக சேனா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வருவதாய் தனது குடும்பத்திற்கு உறுதி கூறியிருந்தார்.அதற்கு இந்த துரதிர்ஷ்டமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது.