நிலவில் வெற்றிகரமாக ரோவரை இறக்கி சாதனை புரிந்த பின் தற்போது செவ்வாய் கிரகத்திலும் ரோவரை இறக்கி செவ்வாய்க் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் சோமநாத் அவர்கள் கூறியுள்ளார்.
செவ்வாயில் ரோவரை களம் இறக்கும் திட்டம் தற்போது முதற்கட்டத்தில் உள்ளதாகவும் இஸ்ரோ இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரோ ஏற்கனவே செவ்வாயை ஆய்வு செய்ய மங்கள்யான் எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது. இது இஸ்ரோவின் திறமைக்கு சான்றாக விளங்குகிறது.
செவ்வாய் தவிர வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் முதற்கட்டத்தில் இருப்பதால் தகவல்கள் வெளியாகி உள்ளது.