இராஷ்டீரிய ரைபிள்ஸ் கமாண்டர் மற்றும் பாரா படை கேப்டனுக்கும் இடையே  நடந்த சுவாரசிய கதை
1 min read

இராஷ்டீரிய ரைபிள்ஸ் கமாண்டர் மற்றும் பாரா படை கேப்டனுக்கும் இடையே  நடந்த சுவாரசிய கதை

காஷ்மீரின் ட்ரால் பகுதியில் 3வது இராஷ்டிரிய ரைபிள்ஸ் கமாண்டர் ( அஸ்ஸாம் ரெஜிமென்ட்) மற்றும் பாரா சிறப்பு படை கேப்டன்  இருவருக்கிடையே நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் இது.

இந்த சம்பவம் இராஷ்டிரிய ரைபிள்ஸ் அதிகாரியே கூறியது போல எழுதப்பட்டுள்ளது.

என்கௌன்டருக்கு செல்லும் போது “துப்பாக்கியில் இருந்து முதல் தோட்டா (எங்களிடமிருந்தோ அல்லது எதிரியிடமிருந்தோ) பறக்கும் போது அங்கு முதலில் பெருங்குழப்பமே நிகழும்”. அந்த சமயத்தின் முதல் சில நொடிகள் நம் கவனம் நமது  நண்பரோ (Buddy) அல்லது நம் குழுவினரின் பாதுகாப்பு பற்றியதாக தான் இருக்கும். இது என்னுடைய சொந்த அனுபவம்.

எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 5-10 நொடிகள் குழுவை ஒருங்கிணைத்து இலக்குகளை வேட்டையாடுவதாய் தான் இருக்கும்.

“அவர்கள் எங்கு ஔிந்திருக்கின்றனர்,எத்தனை பேர்”

அந்த சமயத்தில் திறந்த வெளியில் ஓடி ( இவ்வாறு ஓடுவது பாதுகாப்பு சம்மந்தமாக விதிமுறை மீறல்) குழுவை கட்டுப்படுத்தி,ஒருங்கிணைத்து பயங்கரவாதிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்தப்படும்.அந்த நேரத்தில் கடவுள் கைவிட்டால் , நமது பக்கத்தில் சில காயங்கள்/உயிரிழப்புகள் நிகழலாம்.அடுத்த உங்கள் மனதில் அவரை மீட்பது மட்டுமே மிஞ்சி இருக்கும்.

அந்த மிகக்குறைந்த நொடியில் உங்கள் மூளை பல முடிவுகளை எடுக்கும்.அந்த நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் பற்றி கவனமாய் இருத்தல் வேண்டும் ஏனெனில் இது நம் கீழ் இருக்கும் வீரர்களுக்கு வாழ்வா சாவா போராட்டம் பற்றியது.

இதற்காக நான் என்கௌன்டரின் போது சில கொள்கைகளை கடைபிடிக்கிறேன்.என் தலைமை அதிகாரிகள் அல்லது சகாக்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அவற்றை நான் எப்போதும் மீறுவதில்லை .அவை

குழு ஒருங்கிணைப்பு (contact with ur team) ( பல படைகளை ஒரு அதிகாரி இயக்குவது)

தேவையில்லாத ரிஸ்க் எடுக்க கூடாது.

மனதளவில்  நம்மை புலிகள் என நினைத்து கொள்வது.

ஒரு பயிற்சி பெற்ற வீரனுக்கு பயிற்சி பெறாத பயங்கரவாதி ஈடாக முடியாது.இதை நான் நம்புவதோடு என குழுவினரையும் நம்ப செய்வேன்.

அமைதி- நீ சண்டையை தேர்ந்தெடுக்கவில்லை,அது தான் உன்னை தேடி வந்துள்ளது.

Apply everything – Saam, Daam, Dand, Bhed., Ultimate aim should b achieved.

உன்னை பாதுகாக்கும் நண்பனை (buddy ) நீ பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒனறாய் வாழ்வோம்! ஒன்றாய் வீழ்வோம்.

பயங்கரவாதி போல யோசித்து அவனைவிட ஒருபடி மேலே செயல்படவேண்டும்.

மார்ச் 03,2016 எப்போதும் போல அந்த நாளும் சென்று கொண்டிருந்தது அன்று மாலை நேரம் 4 மணிக்கு அந்த அழைப்பு வரும் வரை.அப்போதைய முன்னாள் அவந்திபோரா டிஎஸ்பி ( எனது மிக நெருங்கிய நண்பர் மற்றும் காஷ்மீர் காவல் துறையில் மிகச் சிறந்த வீரர்) என்னை தொடர்பு கொண்டு குலாம் கான் என்பவர் வீட்டில் 2-3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் தெரிவித்தார்.அவரிடம் இந்த தகவல் மட்டுமே இருந்தது.எனக்கு விருப்பம் இருந்தால் என்னை ஆபரேசனை தொடங்குமாறு கூறினார்.

நான் அவரிடம் ” பத்து நிமிடங்களுக்கு பிறகு உறுதிப்படுத்திவிட்டு அழைக்கிறேன்” என்று கூறிவிட்டு உடனேயே எனது QRT வீரர்களை அழைத்து அவர்களிடம் ஆபரேசனுக்கு தயாராகுமாறும், ஒரு முறை இலக்கு இருக்கும் இடமும் வீடும்  அடையாளம் தெரிந்த பிறகு ஆபரேசன் நடத்தலாம் எனவும் கூறிவிட்டு , பிறகு மீண்டும் அவந்திபோரா டிஎஸ்பி அவர்களை அழைத்து நாங்கள் தயாராக இருப்பதாக கூறினேன்.

அவர் ஆபரேசனுக்கு அனுமதி அளித்தார்.மேலும் அவர் காஷ்மீர் சிறப்பு படையான SOG வீரர்கள் படை இரு குழுக்களை அனுப்பி வைப்பதாகவும் நீங்களே திட்டமிட்டு ஆபரேசனை நடத்துங்கள் என அனுமதியும் அளித்தார்.

எனது அறைக்கு அருகே உறங்கி கொண்டிருந்துபாரா படை கேப்டனை ( பிரிவின் பெயர்  இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது)  எழுப்பி , பயங்கரவாதிகள் இருப்பு குறித்து தகவல் கிடைத்துள்ளது நாங்கள் நடவடிக்கைக்கு செல்ல உள்ளோம் என கூறினேன்.அவர் உடனேயே நான் எத்தனை வீரர்களை அழைத்து வர என கேட்டார்.நான் இதை சிறிய அளவிலான தாக்குதலாக நடத்த உள்ளேன்.நான் X வீரர்களை ( எத்தனை வீரர்கள் என்பது இரகசியம் என்பதால் அதை X குறியீட்டில் குறித்துள்ளேன்) அழைத்து செல்கிறேன், நீங்கள்  X-4 வீரர்களை அழைத்து வர கூறினேன்.

ஆபரேசன் நடக்கும் இடத்தை நோக்கி விரைந்தோம்.தாக்குதல் நடத்த வேண்டிய இடம் கிராமத்தின் மையப் பகுதியில் மெயின் ரோடுக்கு அருகே அமைந்திருந்தது. எனவே இரகசியமாக ஆச்சரியத் தாக்குதல் நடத்துவது சிரமம்.ஏனெனில் பயங்கரவாதிகள் தப்பிக்க சின்ன வழி போதுமானதாக இருந்தது.

எனக்கு உடனே ஒரு யோசனை உதித்தது,அந்த மெயின் ரோடு நாங்கள் எப்போதும் உபயோகப்படுத்ததும் ஒன்று.எனவே எதிரிகளை ஆச்சரியப்படுத்தும் விதமாக எங்கள் வாகனங்களில் இருந்தே செயல்பட முடிவு செய்து நான் முழு குழுவிடமும் இந்த திட்டத்தை பற்றி கூறி செயல்படுத்த தயாரானோம்.எல்லாம் திட்டமிட்டபடி சென்றது.பிறகு திட்டத்தில் மாறுதல்.வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வேண்டி இருந்தது.பாரா படை கேப்டன் மற்றும் அவரது குழு முதலில் இறங்க அடுத்து இரண்டாவது எனது குழு.நான் பாரா அதிகாரியை வேகமாக இறங்கி பின்புற பகுதியை பாதுகாக்க சொல்ல, அந்த நேரத்தில் எனது மற்ற படைகளை நான் களமிறக்க முடியும் ( அவர் எனது சகோதர அதிகாரி என்பதால் அவர் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேன்.அதனால் அவருக்கு எனது கண்காணிப்பு தேவைப்படாது).

நாங்கள் அனைவரும் களமிறங்கிய  போது சராமாரியாக துப்பாக்கிச்சூடு தொடங்கியது. நான் எனது வீரர்களை பாதுகாப்பாக இருந்து தாக்க கூறினேன்.எனது பக்கத்தில் இருந்த மரத்தின் பாதுகாப்பில்  சராமாரி சுடுவதும் குண்டுகளை நிரப்புவதும் சுடுவதுமாக இருக்கும் போது எனது ரேடியோ கரகரத்தது.

ரேடியோவில் பாரா கேப்டன்.அவரும் அவரது நண்பரும் குண்டு காயம் அடைந்ததாக கூறி , நாங்கள் இரு பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாக கூறினார்.இப்போது அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது.நான் எனது கவச வாகனத்தை இயக்கி மெயின் ரோடு வருமாறு சைகை செய்த படி வாகனத்தை நோக்கி ஓடினேன்.எனது உதவி அதிகாரியை தொடர்பு கொண்டு காயம்பட்டவர்களை மீட்க வானூர்தியை வரச்சொல்லுமாறு கூறினேன்.

கேப்டன் மற்றும் அவரது நண்பரை தூக்கி வந்து கவச வாகனத்தில் ஏற்றி எனது கம்பெனிக்கு அழைத்து செல்ல அங்கு சில நிமிடத்தில் வானூர்தி வந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதே நேரத்தில் இங்கு என்கௌன்டரில் மூன்றாவது பயங்கரவாதியும் கொல்லப்பட்டான்.

ட்ராலில் மூன்றாவது பயங்கரவாதியும் கொல்லப்பட ஆபரேசனை முடிக்க பச்சை கொடி காட்டினேன்.அன்று நாங்கள் கொன்றது மிக முக்கிய ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர்.

நாங்கள் ஆபரேசனை முடித்துவிட்டு வெளியேறினோம்.அன்று கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் அசிப் அகமது மிர் , ஹிஸ்புலின் தெற்கு காஷ்மீர் கமாண்டர்.அடுத்து அடில் அகமது பட் .ட்ராலை சேர்ந்தவன்.இவனை உள்ளூர் வாசிகள் ” கோஸ்ட்” அதாவது பேய் என்று அழைப்பார்களாம்.ஏனெனில் படைகள் இவன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தால் காற்றில் பறந்து கானாமல் போவானாம்.ஆனால் அன்று அந்த காற்றே நம் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.மூன்றாவது பயங்கரவாதி இசாக் பர்ரே.

மாலை 4:45க்கு ஆபரேசன் தொடங்கி 5:30க்குள் முடிவடைந்து.சமீப காலத்தின் நடந்த சிறிய ஆனால் மகிழ்ச்சி தரக்கூடிய என்கௌன்டர்.

பாரா கேப்டன் மற்றும் அவரது சக வீரர் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பத்தே நாட்களுக்குள் குணமாகினர்.அவர்களின் வீரதீர சாகசம் காரணமாக அவர்கள் இருவரும் முறையே  கீர்த்தி சக்ரா மற்றும் சேனா விருது பெற்றனர்.

Ladies and gentlemen thats #IndianArmy for You.

Dridhta aur virta – Rasthriya Rifles & Balidaan. Jai Hind.. Jai Hind ki Sena…

Credit to the above story goes to a soldier of 3 RR.

நன்றி சபரி விநாயக் நண்பா..

© இந்திய இராணுவச் செய்திகள்