156 இந்தியத் தயாரிப்பு தாக்கும் வானூர்திகளை வாங்க உள்ள விமானப்படை

  • Tamil Defense
  • September 30, 2023
  • Comments Off on 156 இந்தியத் தயாரிப்பு தாக்கும் வானூர்திகளை வாங்க உள்ள விமானப்படை

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விமானப்படைக்காக உள்நாட்டுத் தயாரிப்பு 156 பிரசந்த் இலகுரக தாக்கும் வானூர்திகள் வாங்கப்பட உள்ளன.இந்த வானூர்திகள் பாக் மற்றும் சீன எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

தற்போது விமானப்படை மற்றும் இராணுவம் தங்களது படைகளில் 15 வானூர்திகளை இணைத்துள்ளது.கடுமையான கால நிலைகளிலும், பனிப்பிரதேசத்திலும் செயல்படும் வண்ணம் இந்த வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது விமானப்படை தனக்கு 156 வானூர்தி தேவை என அரசை அணுகியுள்ளது.இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது தவிர 100 LCA mark 1 விமானங்களும் வாங்கப்பட உள்ளது.இந்த இரு திட்டங்களின் மொத்த மதிப்பீடு 1.5 லட்சம் கோடிகள் ஆகும்.

இந்த 156 வானூர்திகளில் 66 வானூர்திகள் விமானப்படைக்கும், 90 வானூர்திகள் இராணுவத்திற்கும் வழங்கப்படும்.கிழக்கு லடாக் மற்றும் சியாச்சின் போன்ற உயரமான பகுதிகளில் இருந்து செயல்படும் வண்ணம் அதாவது இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இந்த வானூர்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.