கனடாவிற்கு விசா வழங்குவதை நிறுத்திய இந்தியா – தொடரும் அதிரடி நடவடிக்கைகள்

இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் தற்போது கனடாவிற்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இது தொடரும் என இந்தியா கூறியுள்ளது.

மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.கனடாவில் இந்திய எதிர்ப்பு உள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஹர்தீப் சிங் நஜார் என்பவனை இந்திய ஏஜெண்டுகள் கொன்றதாக கனடா குற்றம் சாட்டிய நிலையில் இரு நாட்டிற்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் மூலம் நாம் இதை அறியலாம்.

கனடா இந்திய தூதரை வெளியேற்றியதற்கு பதிலாக இந்தியாவும் கனடிய தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.