சீனாவை எதிர்க்க 24 நீர்மூழ்கிகள் வாங்கும் இந்தியா – அதிரடி திட்டம்
1 min read

சீனாவை எதிர்க்க 24 நீர்மூழ்கிகள் வாங்கும் இந்தியா – அதிரடி திட்டம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீனக் கடற்படையின் ஆதிக்கத்தை ஒழிக்க இந்திய கடற்படை புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்காக புதிய நீா்மூழ்கிகளை படையில் இணைக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது கடற்படை.

வரும் 2040க்குள் 21 அடுத்த தலைமுறை டீசல் கன்வென்சனல் நீர்மூழ்கிகளை படையில் இணைக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.தற்போது படையில் உள்ள பழைய எட்டு கிலோ ரக நீர்மூழ்கிகள் மற்றும் நான்கு டைப் 209 ரக நீர்மூழ்கிகளுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளது.

தற்போது பி-75ஐ திட்டத்தின் கீழ் இந்தியா ஆறு கன்வென்சனல் நீர்மூழ்கி வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர பிரான்சின் Naval Group நிறுவனம் மற்றும் இந்தியாவின் மசகான் கப்பல் கட்டும் தளம் இணைந்து மூன்று கல்வாரி ரக நீர்மூழ்கிகள் கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் சூப்பர் கல்வாரி ரக நீர்மூழ்கிகளும் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த ரக நீர்மூழ்கியின் மேம்பாடு தற்போது நடைபெற்று வருகிறது.

கன்வென்சனல் நீர்மூழ்கிகள் தவிர அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கிகளும் கட்டப்பட உள்ளது.முதல்கட்டமாக மூன்று நீர்மூழ்கிகளும் அடுத்த கட்டமாக மூன்று நீர்மூழ்கிகளும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.