அக்னி மார்க் 2 ஏவுகணையை மேம்படுத்துகிறதா இந்தியா – வெளியான புதிய தகவல்கள்

  • Tamil Defense
  • September 28, 2023
  • Comments Off on அக்னி மார்க் 2 ஏவுகணையை மேம்படுத்துகிறதா இந்தியா – வெளியான புதிய தகவல்கள்

ஏவுகணை மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதாக ரியர் அட்மிரல் சஞ்சய் மிஸ்ரா அவர்களுக்கு DRDO நிறுவனத்தின் செயலர் நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். அந்த நினைவு பரிசில் சில ஏவுகணைகளின் மாதிரிகள் இருந்தன.

அந்த நினைவு பரிசில் அக்னி ஏவுகணை வரிசை ஏவுகணைகள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு புதிய ஏவுகணையும் தென்பட்டது அதுதான் அக்னி மார்க் 2 ஆகும். அக்னி 5 ஏவுகணையை விட அக்னி 5 ஏவுகணை மேம்படுத்தப்பட்டதாகும். அக்னி ஐந்தை விட மார்க் 2
ஏவுகணையில் 20 சதவீதம் எடை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏவுகணையில் 1100 கிலோகிராம் அணுவை வைத்து ஏவ முடியும். இந்த ஏவுகணை 7000 கிலோமீட்டர் வரை சென்று தாக்குதல் நடத்தக் கூடியதாக இருக்கும். ஏவுகணையின் முன்புறத்தில் இருக்கும் வெடிப்பொருளின் அளவை குறைத்தால் 8000 முதல் 9000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்குதல் நடத்தும்.