DRDO தயாரித்துள்ள நீண்ட தூர நிலம் தாக்கும் ஏவுகணை – முக்கிய சோதனை கட்டத்திற்கு தயார்

இந்தியாவின் DRDO நிறுவனம் மேம்படுத்தியுள்ள நீண்ட தூரம் சென்று நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்க உள்ள க்ரூஸ் ஏவுகணை மிக விரைவில் முக்கிய சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.சப் சோனிக் க்ருஸ் ஏவுகணையான இது சுமாராக 1000கிமீ வரை சென்று இலக்கை தாக்க கூடியது ஆகும்.

நிர்பாயா ஏவுகணை திட்டத்தின் அடுத்த திட்டமாக இந்த நெடுந்தூர தாக்கும் ஏவுகணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விமானப்படை மற்றும் கடற்படைக்காக இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏவுகணையின் தாக்கும் தூரம் மற்றும் திறன் காரணமாக இந்த ஏவுகணை படைகளுக்கு புதிய தாக்கும் சக்தியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணையில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் இந்த ஏவுகணையில் நமது சொந்த தயாரிப்பு மானிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின் எட்டுமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

அனைத்தும் வெற்றிகரமாக முடியுமெனில் இந்த ஏவுகணை மிக விரைவாக முழு அளவுத் தயாரிப்பிற்கு உட்படுத்தப்படும்.இந்த ஏவுகணையை தயாரிக்க மூன்று தனியார் நிறுவனங்கள் தங்களது ஆர்வத்தை வெளியிட்டுள்ளனர்.