
சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இராணுவப் படைகளுக்காக பிரலே குவாசி டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
ஒரு ரெஜிமென்ட் அளவிலான பிரலே டாக்டிகல் பலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் உடையது.
ராணுவம் இந்த ஏவுகணைகளை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2015 வாக்கில் இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டது. அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த ஜென்ரல் பிபின் ராவத் அவர்கள் இந்த ஏவுகணை மேம்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார்.
இதுவரை இரு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.