ஆகாஸ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ள பிரேசில்

பிரேசில் நாட்டு ராணுவ தளபதி அவர்கள் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஒரு கண்டிஷனையும் அவர் முன் வைத்துள்ளார். இந்தியா இதற்கு மாற்றாக பிரேசில் தயாரிப்பு எம்பரேயர் விமானம் வாங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய விமானப்படைக்கு தற்போது 40 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் தேவையாக உள்ளன.இதற்காக பிரேசில் தனது C-390M medium Haul விமானத்தை வழங்க முன்வந்துள்ளது.இது தவிர இந்தியாவிற்கு ஆறு அவாக்ஸ் விமானங்கள் தேவையாக உள்ளது.இதற்காக EMP-145 விமானங்கள் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் விமானப்படை ஆராய்ந்து வருகிறது.இந்த விமானமும் பிரேசில் தயாரிப்பு ஆகும்.

இந்த விமானங்களின் தயாரிப்பு 2020ல் முடிவுற்றாலும் வேறு வழியாக இந்த விமானங்களை பெறும் வழிமுறைகளை விமானப்படை ஆராய்ந்து வருகிறது.இந்திய விமானப்படையில் ஏற்கனவே இந்த விமானத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நேத்ரா விமானங்கள் விமானப்படையில் செயல்பாட்டில் உள்ளன.

இரு நாடுகளும் தத்தமது பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி மூலம் பரிமாறிக்கொள்ளும் போது இரு நாடுகளும் இதில் பயன்பெறும் என கூறப்படுகிறது.