இந்தோ-பசிபிக் நாடுகளின் இராணுவத் தளபதிகள் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.இதில் பிரேசில் நாட்டு இராணுவத் தளபதி ஜோஸ் இ சில்வா அவர்களும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது இந்தியா தனது உள்நாட்டு தயாரிப்புகளை காட்சிபடுத்தியிருந்தது. அப்போது தான் இந்திய தொழில்நுட்பங்கள் மீது தனது ஆர்வத்தை பிரேசில் நாட்டு இராணுவ தளபதி வெளியிட்டுள்ளார்.
அதில் முக்கியமாக இந்தியாவின் TATA advanced systems limited தயாரித்த ALS-50 loitering munitions மீது தனது ஆர்வத்தை வெளியிட்டார்.இதே போல newspace research நிறுவனம் மேம்படுத்தியுள் Mackerel loitering munitions uav மீதும் அவரது கவனம் வெளிப்பட்டது.
இது தவிர இந்திய நிறுவனங்கள் மேம்படுத்தியுள்ள ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் மீதும் அவர் தனது ஆர்வத்தை வெளியிட்டுள்ளார்.