லக்னோவில் இந்திய பாதுகாப்பு படைகளுக்காக பிரம்மோஸ் தயாரிக்க கட்டப்பட்டு வரும் தயாரிப்பு நிலையம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் முடியும் எனவும் அதன் பிறகு அங்கு பிரம்மோஸ் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கட்டமைப்பு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் முடிவு பெற்று பிரம்மோஸ் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
தற்போது முப்படைகளும் பிரம்மோசின் பல்வேறு ரகத்தை பயன்படுத்தி வருகின்றன.மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் 1700 ஹேக்டேர் அளவிலான நிலங்கள் கையகப்படுத்தபட்டு உத்திர பிரதேச டிபன்ஸ் காரிடர் அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.இதற்கான 95 சதவீத பணிகள் முடிவு பெற்றதாக அவர் பேசியுள்ளார்.