அனந்தநாக்கில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு இராணுவ வீரர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. அனந்தநாக்கில் என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த அனந்தநாக் என்கௌன்டரில் தற்போது வரை இரு இராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு டிஎஸ்பி உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனந்தநாக்கின் கெரோல் காட்டுப் பகுதியில் இந்த என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது சிறப்பு படை வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
19வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையின் கமாண்டிங் அதிகாரி கலோனல் மன்பிரித் சிங், மேஜர் ஆசிஷ் தோன்சக் மற்றும் காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி ஹூமாயுன் பட் ஆகியோர் இந்த என்கௌன்டரில் வீரமரணம் அடைந்துள்ளனர்.