இந்திய விமானப்படைக்கான நடுத்தர ரக போக்குவரத்து விமான தேடலுக்கு தனது A400 Atlas விமானத்தை தர தயாராக இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய விமானப்படையில் தற்போது உள்ள C-17 Globemaster III மற்றும் C-130j super Hercules விமானங்களின் அளவுகளுக்கு இடையே பொருந்தக்கூடிய இந்த A-400 விமானம் C-130j super Hercules விமானத்தை விட இருமடங்கு எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
Embraer C-390M விமானத்தை விட பத்து டன்கள் எடையை அதிகமாக சுமந்து செல்லக்கூடியது.இந்தியாவின் நடுத்தர விமானத் தேவைக்கு இந்த விமானம் சிறப்பாக பொருந்தும் என கூறப்படுகிறது.
37 மெட்ரிக்டன் எடையை சுமந்து 3700கிமீ தூரம் வரை செல்லக்கூடியது இந்த அட்லஸ் விமானம்.தற்போது ஏர்பஸ் நிறுவனம் இந்திய படைகளுக்கு C-295 விமானங்களை சப்ளை செய்து வருகிறது.