இன்று முதல் அதாவது வெள்ளிக்கிழமை முதல் இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா சிட்னி கடலோரப் பகுதியில் போர் பயிற்சி நடத்த உள்ளன.
இதற்கு முன்பு இந்திய கடலோரப் பகுதிகளில் இந்த பயிற்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி கடலோரபகுதியில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே கடும் மோதல் போக்கு நடைபெறும் வேளையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி குறித்து பேசிய அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படை போர் குழுவின் கமாண்டர் வைஸ் அட்மிரல் காரல் தாமஸ், இந்தப் பயிற்சி எந்த ஒரு நாட்டையும் குறி வைத்து நடத்தப்படவில்லை நான்கு நாட்டுக் கடற் படைகளின் ஒருங்கிணைப்பை அதிகப்படுத்த இந்த பயிற்சி நடைபெற உள்ளது எனக் கூறியுள்ளார்.
1992 முதல் இந்திய மற்றும் அமெரிக்க நாட்டு கடற்படைகள் இந்தப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன தற்போது 2007 முதல் ஆஸ்திரேலியாவும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நீக்கப்பட்ட பிறகு 2020 முதல் அது மீண்டும் குவாட் நாடுகளுடன் இணைந்து கொண்டது.
சீனாவை ஒடுக்க தான் இந்த குவாட் நாடுகள் செயல்பட்டு வருகிறது என சீனா கடும் விமர்சனம் செய்து வரும் வேளையில் தற்போது ஆஸ்திரேலியா கடற்கரை பகுதியில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.