புதிய சக்திவாய்ந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ய உள்ள இந்தியா- கவனிக்கும் உலக நாடுகள்

  • Tamil Defense
  • August 10, 2023
  • Comments Off on புதிய சக்திவாய்ந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ய உள்ள இந்தியா- கவனிக்கும் உலக நாடுகள்

இந்தியாவின் DRDO நிறுவனம் புதிய நெடுந்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ய உள்ளது.இது உலக நாடுகளின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது.இது இந்தியாவின் கப்பற்படை திறனில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த புதிய Quasi ballistic long range anti ship missile தற்போது மேம்பாட்டில் உள்ளதாகவும் 2024ன் முற்பகுதியில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது.சுமார் 1500கிமீ தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணை இந்தியாவின் கடற்சார் திறனில் மாபெரும் மாற்றங்களை கொண்டுவர உள்ளது.

எதிரிகளுக்கு எதிரான இந்தியாவின் திறனில் பெரிய சக்தியை இந்தியா பெறும்.கடலோர பாதுகாப்பிற்காக முதன்மையாக தயாரிக்கப்பட்டாலும் மற்ற வகை தாக்கும் திட்டங்களிலும் இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும்.

கடலோரங்களில் இந்த ஏவுகணை பேட்டரிகளை நிலைநிறுத்துவதன் மூலமாக நமது கடற்பகுதிகளை பாதுகாக்க முடியும்.மேலும் இவற்றை முன்னனி போர்க்கப்பல்களிலும் நிலைநிறுத்த முடியும்.