இந்திய கடற்படையின் பலத்தை பெருக்க ஆறாவது மற்றும் கடைசி கல்வாரி ரக இந்திய கடற்படையில்விரைவில் இணைய உள்ளது. வாக்சீர் என்ற நீர்மூழ்கி கப்பல் தற்போது கடல் சோதனையில் உள்ளது. இந்த நீர்மூழ்கி வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படையில் இணைய உள்ளது.
இந்தியாவின் மாசகன் கப்பல் கட்டும் தளம் மற்றும் பிரான்சின் நேவல் குரூப் இணைந்து இந்தியாவில் ஆறு கல்வாரி ரக நீர் மூழ்கிகளை கட்டி வருகின்றன. இதில் ஆறாவது நீர்மூழ்கி தற்போது கடல் சோதனையில் உள்ளது.
தற்போது வரை ஐந்து நீர்மூழ்கிகள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. வாக்சீர் ஆறாவது நீர்மூழ்கி ஆகும். இந்திய கடற்படையில் உள்ள நவீன நீர்மூழ்கிகளில் இந்த கல்வாரி ரக நீர்மூழ்கிகளும் அடக்கம். இந்த ஆறு நீர் மூழ்கிகளும் இந்திய கடற்படைக்கு மாபெரும் சக்தியை வழங்கும்.
கடல் சோதனை முடியும் பட்சத்தில் ஆறாவது நீர்மூழ்கியான வாக்சீர் அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்திய கடற்படையில் இணையும்.