தேஜஸ் விமானத்தின் செயல்பாட்டு தன்மையை மேம்படுத்தவும், காஷ்மீரில் தனது பலத்தை அதிகரிக்கவும் இந்திய விமானப்படை தனது தேஜஸ் மார்க் 1 ஸ்குவாட்ரானை அவந்திபோரா விமானப்படை தளத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கார்கில் போரின் போது இந்த அவந்திபோரா தளம் விமானப்படைக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.இதன் அமைவிடம் காரணமாக இந்திய விமானப்படைக்கு இந்த தளம் மிக முக்கிய strategic முக்கியத்துவம் வாய்ந்த தளமாக உள்ளது.
விமானப்படையில் தற்போது இரு ஸ்குவாட்ரான் தேஜஸ் விமானங்கள் உள்ளன.இவை தமிழகத்தின் கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து செயல்பட்ட வருகின்றன.சூலூர் தளம் தான் தேஜஸ் விமானங்களின் சொந்த தளமாக இருந்தாலும் நடவடிக்கைகளுக்காக அடிக்கடி அவை முன்னனி விமானப்படை தளங்களில் இருந்தும் செயல்படுவது வழக்கம் ஆகும்.
தேஜஸ் மார்க் 1-ஐ விட அதிநவீன ரகமான மார்க் 1ஏ ரகம் வரும் 2024 முதல் படையில் இணைக்கப்பட உள்ளது.