400கிமீ தொலைவு செல்லும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை உருவாக்கும் இந்தியா – முழுத் தகவல்கள்

  • Tamil Defense
  • July 27, 2023
  • Comments Off on 400கிமீ தொலைவு செல்லும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை உருவாக்கும் இந்தியா – முழுத் தகவல்கள்

தற்சார்பு என்ற கொள்கையை முன்னிட்டு இந்தியா தற்போது 400கிமீ வரை சென்று எதிரி போர்விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் மூன்றடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது போன்ற தொழில்நுட்பங்களை கொண்ட வெகுசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது.சுமார் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் இந்த அமைப்பை இந்தியா மேம்படுத்தி வருகிறது.மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம் கொண்டுள்ளதால் வெவ்வேறு தூரத்தில் வரும் இலக்குகளை தாக்கியழிக்க வல்லது இந்த ஏவுகணை அமைப்பு.

தற்போது இரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு தரத்தில் இந்த அமைப்பை இந்தியா மேம்படுத்தியுள்ளது.ஏற்கனவே இஸ்ரேலுடன் இணைந்து 70கிமீ வரை சென்று இலக்குகளை தாக்கும் MRSAM ஏவுகணை அமைப்பை இந்தியா மேம்படுத்தியுள்ளது.

இந்தியா தற்போது S-400 அமைப்புகளை எல்லையில் நிலைநிறுத்தி வைத்துள்ளது.400கிமீ மட்டுமல்ல குறைந்த தூரத்திலா பறக்கும் இலக்குகளை கூட இந்த அமைப்பால் சுட்டு வீழ்த்த முடியும்.ஆனால் இதே அமைப்பை சீனாவும் எல்லையில் நிலைநிறுத்தியுள்ளது.